All are superheroes(அனைவரும் சூப்பர் ஹீரோக்கள்)
வணக்கம் நண்பர்களே
இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் , நம்ம
எல்லாருமே சூப்பர் ஹிரோ படம் பார்த்து இருப்போம் ,இல்லையென்றால் பீம்
மாதிரியான CARTOON யை பார்த்து இருப்போம் , இதையெல்லாம் பார்த்த
பிறகு நம்ம ,ஒரு முறையாவது நினைத்து இருப்போம் இந்த மாதிரி
சக்திகள் நமக்கும் வரனும் என்று, ஆனால் நம்ம ஏன் இப்படி
நினைக்க வேண்டும், நமக்கு ஏற்கனவே இந்த சக்திகள் இருக்கிறது, அதிகநேரத்தில் வெளியிலும் வருகின்றது அது எவ்வாறு என்று இதில் பார்ப்போம்
FIGHT-OR-FLIGHT RESPONSE(சண்டை அல்லது விமான பதில்):
நம்ம எல்லாரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடியதை விட ,நாய் தொரத்தும் போது வேகமா ஓடி இருப்போம் ஆனால்
அது எப்படியென்று யோசித்து இருப்போமா , நாம் பயப்படும் பொழுது நம்ம மூளையே நம்மளை பாதுக்காக்க நமக்கு சூப்பர் பவரை தரும்
அப்பொழுது நமக்கு அதிக பலம் வரும், இதில் உள்ள அறிவியல்
என்னவென்று பார்ப்போம்
நம்மை ஒரு நாய் தொரத்துகிறது என்று வைத்து கொள்வோம்,அப்பொழுது
வேகமாகவும் ஒட முடியாது ,அந்த நேரத்தில் நம் மூளை
ஹைப்போதலாமஸ் என்னும் பகுதிக்கு சிக்னலை அனுப்பும்
ஹைப்போதாலாம் சிக்னலை சிறுநீரகத்திற்கு மேல் உள்ள அட்ரினல் சுரப்பிக்கு அனுப்பும் அட்ரினல் சுரப்பி அது சுரக்கின்ற அட்ரினலீன், கார்டிசோலை துண்டிவிடுகின்றது ,உடனே அட்ரினலீன் நம்ம உடம்பில் குளுக்கோஸை அதிகப்படுத்தும்,இதனால் நம்ம உடம்பின்
உச்சகட்ட பலத்தை அடைவோம் ,கார்டிசோல் என்ன பண்ணும்
என்றால் இதயதுடிப்பை அதிகப்படுத்தும்,இதால் ஆக்ஸிஜன்
அதிகளவு எடுக்கப்படும்,இந்த இரண்டு செயலும் நடைபெறுவதால்
நம் உடல் உச்சகட்ட பலம் மற்றும் திறனை அடையும்,இச்செயல்
நடக்கும் பொழுது உங்களால் தூக்க முடியாத பொருளையும்
தூக்க முடியும் மற்றும் ஒரு சூப்பர் ஹிரோ போல் பண்ண முடியும்.
நன்றி
G.விக்னேஷ்
Comments
Post a Comment